கோவை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து விழா..!

கோவை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.
இதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, எலும்புப்புரை போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் புரதச்சத்து உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவுகள் குறித்தும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உணவுகளை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் பாா்வையிட்டனர்.