பயணிகளின் பணிவான கவனத்திற்கு… கோவை நிலையத்தில் பராமரிப்பு பணி… பாலக்காடு, ஷொரனூர் ரயில்கள் போத்தனூர் வரை மட்டுமே இயக்கம்..!

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு, ஷொரனூர் ரயில்கள் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை – போத்தனூர் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு கோவைக்குப் புறப்படும் தினசரி ரயில் (எண்: 06806) அக்டோபர் 17-ந் தேதி, பாலக்காடு – போத்தனூர் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் – கோவை நிலையம் இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ஷொரனூரில் இருந்து கோவைக்கு தினமும் காலை 8.20 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்: 06458) அக்டோபர் 17,19, 20, 21 ஆகிய தேதிகளில் ஷொரனூரில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த நாள்களில் போத்தனூர் – கோவை நிலையம் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு கோவைக்குப் புறப்படும் ரயில் (எண்: 06420) அக்டோபர் 17-ந் தேதி பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் – கோவை ரயில் நிலையம் இடையே ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.