தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு கோவை டாக்டர் தற்கொலை..!

கோவை : கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் கவின் (வயது 31) இவர் கோவை காளப்பட்டி, அசோக் நகர் பகுதியில் மற்றொரு டாக்டருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ,ஆனால் இந்த திருமணத்தில் கவினுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவின் தான் தங்கி இருந்த அறையில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். மற்றொரு டாக்டர் கவினை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் டாக்டர் கவின் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை வருகிறார்கள்.