கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில் கோவை உக்கடம் பகுதியில் நகரை துய்மை செய்யும் பணி இன்று தொடங்கியது. என். எஸ் கார்டன், சிட்டி பார்க், கோட்டை புதூர் சன் கார்டன் தைலத் தோட்டம் ஆகிய பகுதிகளில் மாநகர காவல் துறையினர், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பிஷப் அப்பாசாமி கல்லூரி தேசிய மாணவர் படையினர் என மொத்தம் 300 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.அதிகாலை 6:00 மணி முதல் 8 மணி வரை இந்த பணி நடந்தது. அங்கு மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளி லாரியில் ஏற்றினார்கள். 3 மணி நேரத்தில் 20 லாரி குப்பைகள் அகற்றப்பட்டது.கோவை ஆர். எஸ் .புரம் சரக உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிரபுதாஸ், ஆனந்த ஜோதி,மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இது நடந்தது. இந்தப் பணியை அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
Leave a Reply