கோவை கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி.கே .புதூர் ராமானுஜம் விதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அர்ஷிதா (வயது 17) இவர் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கேட்ரிங்) முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் இவரால் கல்லூரிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வரும் அடைந்த அர்ஷிதா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது தாயார் சிவப்பிரியா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மரியமுத்து சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.