தமிழகம் வரும் பிரதமர் மோடி: தனித்தனியாக சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம் ..?

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார்.

தமிழகத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் சென்னை வரும் மோடி, மாலை ஆளுநர் மாளிகையில் தங்கி முக்கியப் பிரமுகர்களை சந்திக்கிறார். அப்போது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் அவரை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை காரணமாக பூசல்கள் எழுந்து ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிவிக்க, ஈபிஎஸ் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் அறிவிக்க பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது..