கியிவ்: எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்துள்ள சம்பவம் குறித்து 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது. சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். மொழி, கலாச்சார விவகாரத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ...

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச ...

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, ...

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன்- ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கும் அபாயம் அதிகமாகி இருக்கிறது. தனது அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்ய அதிபர் புடின், அதன் மீது போர் ...

ரஷ்ய படைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைனை தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுல்லிவன், உக்ரைனுக்குள் படைகளை அனுப்பும் முடிவை ரஷ்ய அதிபர் புடின் எடுத்துவிட்டாரா ...

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாலன் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 43) இவர் கோவை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் ராகுல் அசோக் (வயது 19) இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து ...

கேரளா மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் காரணமாக, இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட பனவல்லி என்ற பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது, மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் பரவக்கூடிய பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்குக் காய்ச்சல், நடப்பாண்டில்பாதிப்பு ...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் ...

இந்தோனேசியாவில் ஒரு முதலை சுமார் ஆறு வருடங்களாக கழுத்தில் மாட்டிக்கொண்ட டயருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் பலூ நகரின் ஆற்றில் கிடந்த முதலையின் கழுத்தில் இருசக்கர வாகனத்தின் டயர் மாட்டிக்கொண்டது. சுமார் ஆறு வருடங்களாக அந்த டயரை முதலையின் கழுத்திலிருந்து நீக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதலையின் கழுத்திலிருந்து ...