வால்பாறையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரி
கடந்த சில வருடமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால்
அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி
அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடல் ஊற்றி தீ வைத்து
தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முடீஸ் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.