மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் அளவுக்கு அதிகமாக மது குடித்து கணவன் மரணம்..

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள  கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 31) டிரைவர் .இவரது மனைவி நந்தினி பிரியா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். சங்கர் குடிப்பழக்கம் உடையவர்-இதனால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி நந்தினி பிரியா கோபித்துக் கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.இதனால் சங்கர் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு தூங்கிய சங்கர் மீண்டும் எழுந்திருக்கவில்லை .இறந்துவிட்டார்.இது குறித்து மனைவி நந்தினி பிரியா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.