தோட்டத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்து தொழிலாளி பரிதாப பலி..

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் சேர்ந்தவர் அசோக் குமார் இவர் அங்குள்ள பண்ணை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.