இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் நாட்டிற்கான அர்ப்பணிப்பிற்குத் தயாராகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம். இந்தியாவின் பாதுகாப்புப் படை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தரை வழியாக வரும் ஆபத்துக்களை தரைபடையினரும், வான் வழியாக வரும் ஆபத்துக்களை விமானப் படையினரும், கடல் ...

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ...

லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோ-பூஜை செய்து வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் வேறுவழியின்றி ...

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் சுரங்கப்பாதையில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் மின்தடை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மின்சார விளக்குகள் மங்கலாக ஒளிர விட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் ( வயது 45) கட்டிட தொழிலாளி இவர் நேற்று அன்னூர் கோவை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரியாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை ...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் ரவி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்துக்குள்பட்ட கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் கணேசன், தொழில்நுட்பவியலாளர் சரவணன், கல்வெட்டியல் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் ...

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் ...

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொருளாளரும், உத்தரப்பிரதேச ஒலிம்பிக் சங்கச் செயலாளருமான ஆனந்தேஸ்வர் பாண்டே, பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், உயர் பதவியில் இருக்கும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆனந்தேஸ்வர் பாண்டேவின் இத்தகைய சர்ச்சையான புகைப்படங்கள் குறித்து, லக்னோ பிராந்திய விளையாட்டு உயரதிகாரிகள் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் ...