சுட்டரிக்கும் வெப்பம்: சீன மக்கள் சுரங்கப்பாதையில் தஞ்சம்..!!

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் சுரங்கப்பாதையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சீனாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் மின்தடை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் மின்சார விளக்குகள் மங்கலாக ஒளிர விட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைத்துள்ளனர்.

அங்கு சீட்டு விளையாடியும், உறங்கியும் மக்களும் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் சோங்கிங் மாகாணத்தில் அதிக வெப்பநிலையால் யாங்சி நதியின் துணை நதி ஜியாலிங்கும் வறண்டது குறிப்பிடத்தக்கது.