வேகமாக வந்த அரசு பேருந்து மோதி மொபட்டில் சென்ற தொழிலாளி பரிதாப பலி..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் ( வயது 45) கட்டிட தொழிலாளி இவர் நேற்று அன்னூர் கோவை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரியாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து சந்திரன் மனைவி கலைவாணி அன்னூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி கஞ்சம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகுமார் (வயது 40) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.