சென்னை: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என கூறி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: கேள்வி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ...
கடந்த சில நாட்களாக பலரும் பேசிவரும் ஒரு விஷயம். புரியாத ஆங்கில வார்த்தை, தெரியாத அறிவியல் அதிசயம் இந்த Ectolife. இதை உலகின் முதல் செயற்கை கருவறை அல்லது கருப்பை திட்டம் என அறிவியல் கூறுகிறது. இது சாத்தியமானால் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் இதன் மூலம் பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் வராது, மாற்றுதிறனாளிகள் ...
உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் 79 பேர் மயக்கம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த இருபத்தி ஏழாம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று ...
ரிஷப் பண்ட் யார் என்பதே எனக்கு தெரியாது, நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சுற்றி இருப்பவர்கள் சொல்லித்தான் தெரியும் எனக்கு’ என்று அவரை காப்பாற்றிய பஸ் டிரைவர் சுஷில் குமார் பேட்டியளித்துள்ளார். அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் ...
சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை ...
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் நேற்று காலை விபத்துக்குள்ளான நிலையில் ரிஷப் பண்ட் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் கண் விழித்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது காரை தானே ஓடியதாகவும் ...
கோவை பேரூர் செட்டிபாளையம் ரோஜா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 37). இவரது மனைவி சுபா (34). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜ்மோகன் சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோபித்து ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 53) இவர் நேற்று தனது மகளுடன் ஸ்கூட்டரில் கோவில்பாளையம்- கருவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார் .இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
கோவை சின்ன வேடம்பட்டி அருகே உள்ள உடையாம்பாளையம், அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் ( வயது 36) பெயிண்டர்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் கடந்த 2 வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை .இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்பிரகாஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் உள்ள விட்டத்தில் ...
கோவை குனியமுத்தூர் பி .கே. புதூர்,பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் .அவரது மகன் மனோஜ் குமார் ( வயது 25) பி.இ.படித்து முடித்துவிட்டு சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது ...













