கோவை: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பிறந்தது முதல் 5 வயது வரை பல்வேறு வகையான தடுப்பூசி திட்டம் தமிழக சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று போலியோ தடுப்பூசி. இந்த தடுப்பூசி தற்போது குழந்தை பிறந்த 6 மற்றும் 13 -வது வாரங்களில் 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் ...

கோவை சூலூர், பீடம்பள்ளி அருகே உள்ள காரைக்குட்டை பகுதியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் இன்று காலையில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை வீசிவிட்டு சென்றிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ ...

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள நவலையை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 35) இவர் சிங்காநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம், அண்ணா நகரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு சீட்டு விளையாடும் பழக்கம் உள்ளது ,இதனால் ஏராளமான பணத்தை இழந்தார். இந்த நிலையில் இவர் வாழ்க்கையில் ...

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கிராமம் தோறும் சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட ...

கோவை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு தர்னிஷ் ,வாசுலேகா இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் துப்புரவு வேலைக்காக ...

வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லியில் அணிவகுத்து வரும். கடந்த ஆண்டு, வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு ...

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று  (ஜன.3) தேவராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க இரு சக்கர வாகனம் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளி குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரிய பெட்டன், குணசேகரன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள் .நேற்று மாலையில் ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3பேர் திடீரென கையில் மறைத்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் ரோடு, பாண்டி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56) இவர் மின்வாரியத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா ( வயது 46) மகள் ஜெய் நந்தினி (வயது 19 ) இவர்கள் 3 பேரும் பைக்கில் அன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். தென்திருப்பதி ...

கோவை: திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார். இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் ...