காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் ...

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் ...

மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரராகி விட வேண்டும், வங்கிக் கணக்கில் 8 இலக்கக் எண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 15*15*15 என்ற விதிப்படி அதை அடையலாம். விடாமுயற்சியும், துல்லியமான கணிப்பும், சிறிது மெனக்கடலும் இருந்தால் போதும்.அது என்ன 15*15*15 விதி!இந்த எண்கள் எதை குறிக்கின்றன என்றால், ஆண்டுக்கு 15% ...

லண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் யுரேனியம் இருந்தது. இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்தது, இந்த செய்தி “உண்மையானதல்ல” என்று கூறியது. இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60)ஓய்வு பெற்ற  பணியாளர், இவர் நேற்று சின்ன பணிக்கம்பட்டி பகுதியில் உள்ள பி.ஏ.பி.பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை போத்தனூரை அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவை : மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் சுஜித் மைட்டி ( வயது 19) சுதீப் மைட்டி ( வயது 19) இவர்களும் இரட்டை சகோதரர்கள். கோவை ராஜவீதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தங்கி இருந்து நகைத் தொழில் செய்து வருகிறார்கள். நேற்று சுதீப் நைட்டி வெளியே சென்றிருந்தபோது சுஜித் மைட்டி ஆர் எஸ் புரம் ...

கோவை கணபதி மணியகாரம்பாளையம் அருகே உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்( வயது 61 ) கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது திடீரென அவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52,53 வது வார்டு மசக்காளிபாளையம் ரோட்டில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடையின் உரிமையாளர்கள் சிலர் மழைநீர் வடிகால் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். இது சம்பந்தமான புகார்கள் மாநகராட்சி கமிஷனருக்கு வந்தது. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆக்கிரமிப்புகளை இடித்த அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ...

கோவை: நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனே சிறைதுறை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ...