கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..

கோவை: நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனே சிறைதுறை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.