கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை,மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் கீதா (வயது 64) இவர் நேற்று மாலை அங்குள்ள புதுப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் ரயிலில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வி ...
வடவள்ளி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வருண் விஜய் (வயது24). இவர் கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் வந்தார். பின்னர் மருதமலை ஐ.ஓ.பி.காலனியில் உள்ள தனது நண்பரான சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை வருண் விஜய் ஐ.ஓ.பி.காலனியில் இருந்து கோவை நோக்கி காரில் வந்தார். பாரதியார் பல்கலைக்கழகம் அருகே ...
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்து 5 ஆயிரத்து 843 போ், 20 முதல் ...
கோவை: நடராஜர் கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழா வழக்கம் போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான் ‘நடனம் ஆடும் ஒருவரை’ கடவுளாகவும் யோகியாகவும் போற்றி கொண்டாடுகிறோம். ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ...
பாகிஸ்தானின் பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைந்து, அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. அந்நாட்டில் பால் லிட்டர் ரூ.210 ஆகவும், கோழிக்கறி கிலோ ரூ.780 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுவதால் மக்கள் தவிக்கின்றனர் பாகிஸ்தானுக்கு உதவுவதாகக் கூறிய சர்வதேச செலவாணி நிதியம் நிதியுதவி வழங்குவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது. பாகிஸ்தான் ...
கோவை: சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திராவிலும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் கடந்த அக்டோபர் மாதம் ...
புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா தலைமையில் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என்று பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் ...
புதுச்சேரியில் கோர்ட்டு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாத கலெக்டரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது நல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளது இருப்பினும் புதுச்சேரியில் பொது இடங்களில் ...
கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்! தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு ...












