கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை,மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் கீதா (வயது 64) இவர் நேற்று மாலை அங்குள்ள புதுப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் ரயிலில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வி ராணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..
Leave a Reply