கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்த கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனிப்படையினர் நேற்று முன் தினம் இரவு அங்கு விரைந்தனர் .போலீசார் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் ஊட்டிக்கு தப்பியது. இதையடுத்து போலீசார் ஊட்டி விரைந்தனர். இதனால் அந்த கும்பல் ஊட்டியில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்றனர் .உடனடியாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .ஊட்டி- கோத்தகிரி சாலை கோத்தகிரி – குன்னூர் சாலையில் தீவிரவாகன தணிக்கை செய்யப்பட்டு அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) டேனியல் (வயது27) ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த எஸ் கவுதம் (வயது24 )கணபதி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஹரி என்ற கவுதம் (வயது 24) பீளமேட்டைச் சேர்ந்த பரணி சவுந்தர் (வயது 20) ரத்தினபுரி தில்லைநகரை சேர்ந்த அருண் சங்கர் ( வயது 21) ரத்தினபுரி சம்பத் விதியைச் சேர்ந்த சூர்யா (வயது 23) என்பது தெரிய வந்தது. .அவர்கள் 7 பேரையும் தனிப்படை போலீசார் 2 காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்தனர். கோவைக்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டவர்களில் ஜோஸ்வா, எஸ். கவுதம் ஆகிய இரண்டு பேரும் தங்களுக்கு வாந்தி வருவதுடன் ,தலை சுற்றுகிறது .மேலும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் போலீசார் அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். மேலும் அவர்கள் இருவரும் அங்கு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்களை பிடிக்க வந்த போலீஸ்காரர் யூசுப்பை அரிவாளால் வெட்டினர் .இதை
யடுத்து சப் இன்ஸ்பெக்டர் இருளப்பன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்டு சுட்டார் ..இதில் எஸ். கவுதம் காலில் ஒரு குண்டும், ஜோஸ்வா காலில் 2 குண்டுகளும் பாய்ந்தது.ஒரு குண்டு யார் மீதும் படவில்லை..இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .கைது செய்யப்பட்ட 7பேர் மீதும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை ,வழிப்பறி, உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோவையில் குற்றம் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நகரில் பல்வேறு குற்றங்களின் தொடர்புடைய 540 ரவுடிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடிகளை ஒடுக்க அதிரடி திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மேலும் நகரம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சரவணம்பட்டியில் நடந்த சோதனையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் 6 ரவுடி கும்பல்கள் உள்ளன. இவர்களின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது .முன்னாள் குற்றவாளிகளிடம் இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என்ற பிணை பத்திரமும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 பேரிடம் பிணை பத்திரம் வாங்கப்பட்டுள்ளது ..பிணை பத்திரம் கொடுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது .நகரில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடவும் ,குற்றங்களை தடுக்கவும் ‘தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இரவு ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பட்டப் பகலில் நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி தப்பி ஓடிய கொலையாளிகளை சுட்டு பிடித்து கைது செய்த கோவை மாநகர காவல்துறைக்கு பொதுமக்களும் ,பல்வேறு சமூக சேவை அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Leave a Reply