புதுச்சேரியில் கோர்ட்டு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றாத கலெக்டரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொது நல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரப் பகுதியில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளது இருப்பினும் புதுச்சேரியில் பொது இடங்களில் மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த பேனர்கள் விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தும் பலர் தங்களின் சுய தேவைக்காகவும் வீண் விளம்பரத்துக்காகவும் பேனர் வைத்து தங்கள் பவரை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் புதுச்சேரியில் நடந்த ஜி 20 மாநாட்டை ஒட்டி பொது இடங்களில் இருந்த பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டது நகரப் பகுதி பளிச் என காட்சி அளித்தது மாநாடு முடிந்த பின் மீண்டும் மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்கள் அரங்கேற்றம் துவங்கியது இதை யொட்டி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் டிஜிட்டல் பேனர்களை நிரந்தரமாக அகற்றாததாலும் கோர்ட்டு உத்தரவை மதிக்காத கலெக்டரை கண்டித்து பொது நல அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்படி போராட்ட குழுவினர் காலை ராஜீவ் சிலை அருகில் கூடிய போராட்டக் குழுவினர் சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் செல்வம் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் ஸ்ரீதர் மற்றும் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் பிரகாஷ் செல்வகுமார் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்கள் சாலை அருகே சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பேரிகாடு அமைத்து ஊர்வலத்தை தடுத்தனர் உடன் போராட்டக் குழுவினர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர் . இந்த போராட்டத்தால் சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..
Leave a Reply