கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி ...
கோவை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலம்,குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன்ரோடு, லாலி ...
கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே நேற்றிரவு 11 மணி அளவில் ரயிலில் அடிபட்டு கணவன்- மனைவி இருவர் அதே இடத்தில் இறந்து கிடந்தனர்.இதுகுறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் ...
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பது இவர்தான். சமீப காலங்களில் இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதன் காரணமாக, தற்போது தான் நடிக்கயிருக்கும் படங்களின் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து ...
பலமுறை உங்கள் போன் ஒட்டு கேட்கப்படுகிறது ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஏனெனில் பலருக்கு இதன் முறை தெரியாது. இதுபோன்ற பல நிகழ்வுகளில் பலர் தங்கள் நண்பர்கள் அல்லது கூட்டாளிகளின் போனை ஒட்டு கேட்பதை காணலாம். இருப்பினும், இது முற்றிலும் சட்ட விரோதமானது மற்றும் உங்கள் போனை யாராவது ஒட்டு கேட்டால், அவருக்கு எதிராக ...
கோவை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 32). கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு 17 வயது இருக்கும் போது மூளையில் ஏற்பட்ட கட்டியால் தனது இரு கண் பார்வையையும் இழந்தார். அப்போது அவர் மாஸ்கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார். திடீரென பார்வை பறிபோனதால் அவர் மிகவும் பதறிப்போனார். இருந்த போதிலும் ...
கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி.இவரது மனைவி நாகலட்சுமி ( வயது 34) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக நாகலட்சுமி கடந்த சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 45 நாட்களே ஆன் பெண் குழந்தை உள்ளது ...
கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 52) பாத்திர வியாபாரம் செய்து வந்தார் .இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்தும் ...
கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம், மீனாட்சி நகர், உடையார் வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள்( வயது 75) இவரது படுக்கையின் அருகே கொசுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது படுக்கையில் தவறி விழுந்து மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது .இதில் தனம்மாள் உடல் முழுவதும் கருகியது .அவர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார் .இது ...













