தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக இன்று இந்தியாவுக்கு வந்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள்) ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமா் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டாா். இப்போது 8 சிவிங்கிப் புலிகளும் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றன.
அடுத்தகட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகளும் 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் சி-17 விமானம் வியாழக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. அதன்படி அந்நாட்டின் கெளடெங் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளுடன் சி-17 விமானம் மத்திய பிரதேசத்தின் குவாலியா் விமானப் படை தளத்துக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. அங்கிருந்து, விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்படும் சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படுகின்றன..
Leave a Reply