கோவை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலம்,குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன்ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகியவற்றில் இன்று மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, அவினாசியிலிருந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம் வழியாக கனரக, சரக்கு வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. மாறாக, எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம். கோவை நகரிலிருந்து அவினாசிக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் அண்ணா சிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் எல். அன்ட். டி. பைபாஸ் ரோடு செல்லலாம்.
காளப்பட்டி ரோடு வழியாக வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சிட்ரா சந்திப்பை அடைய தடை விதிக்கப்படுகிறது. காளப்பட்டி நால்ரோடு, மயிலம்பட்டி, தொட்டிபாளையம் வழியாக செல்லலாம். சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து அவினாசி ரோடு, திருச்சி ரோட்டுக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம்.
மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கவுலிபிரவின் ரோடு, சிந்தாமணி வழியாக செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.அதற்கு மாறாக பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம்அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லூர் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். பொதுமக்கள் அவினாசி ரோடு, வழியாக பழைய மேம்பாலம், குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன் ரோடு, லாலி ரோடு, மருதமலை ரோடு ஆகிய பகுதிகளில் செல்ல வேண்டியது இருந்தால் தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்ளவும்.
அவினாசி ரோடு, சின்னியம்பாளையம் வழியாக, கோவை நகருக்குள் நகருக்குள் வரும் கார், இதர வாகனங்கள், தொட்டி பாளையம் பிரிவு, மயிலம்பட்டி, காளப்பட்டி நால்ரோடு, சரவணம் பட்டி வழியாக செல்லலாம். விமான நிலையம், ெரயில் நிலையம், ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும்.
அவிநாசி ரோடு, பழைய மேம்பாலத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மேற்குறிப்பிட்ட மேம்பாலத்தின் கீழே செல்லலாம். மருதமலைரோடு, தடாகம் ரோடு வழியாக வாகனங்கள் ஜி.சி.டி., பாரதிபார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வடகோவை மேம்பாலம், காந்திபுரம் வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply