கோவை போலீஸ் பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு அருகே மாநகர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவில் இதில் ஒரு வாகனத்தில் திடீரென்று தீப் பிடித்தது. தீ மள, மளவென பரவியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 69 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக ...

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள ...

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் ...

கோயில்களில் சுவாமி சிலைகள்தான் காணாமல் போய்விட்டதானச் செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோயில்களே காணாமல் போய்விட்ட தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் மூன்று கோயில்களைக் காணவில்லை என ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் முடித்து ...

நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் ஊரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு ...

கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவரது மனைவி சந்திர பிரபா (வயது35). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் நிறுத்ததில் இறங்க முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க ...

ரோம்: இத்தாலி கடலில் சென்ற படகு மூழ்கிய விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் பலியானதாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களை துருக்கியில் இருந்து ஏற்றிச் சென்ற மரக் கப்பல் ஒன்று ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றது. நேற்று அதிகாலை தெற்கு இத்தாலியின் ...

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட உலியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(58). விவசாயி. இவர் உலியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென ராதாகிருஷ்ணனை தாக்க முயற்சித்தது. யானை வருவதை பார்த்ததும் ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ...

கோவையை அருகே உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 62) அங்குள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது மனைவி சாந்தியுடன் ஸ்கூட்டரில் சிங்கையன் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ...

நீலகிரி மாவட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை, மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறிதாவது:- சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையின்படி, 20 ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் ...