2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கெம்பநாயக்கனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் மூர்த்தி (25). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் வீட்டில இருந்து கொண்டு மாடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூர்த்தி தனது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்தவர் கிட்டான் (65). கூலித்தொழிலாளியான இவர் ஏழு வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர்  தேடிப் பார்த்தபோது அங்கிருந்த ஓடையின் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை ...

கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சி பார்க்கிங் உள்ளது. இங்கு 74 இருசக்கர வாகனங்களும் 4 ஆட்டோக்களும் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றினார்கள். இந்த வாகனங்கள் ...

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...

பாகிஸ்தானில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களுக்கு பொது மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ...

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய ...

மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் ...

மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு ...