கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது தடுப்புகள் அமைத்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நெரிசல் ஓரளவுதான் குறைந்துள்ளது. காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் ...

கோவை :கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஆலத்துறையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42 |இவர் கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து நகை தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார் .இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் மின் விசிறியில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு ...

கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு -வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து நகை, பணத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை 56 பேருக்கு விருது வழங்கும் ...

தென்காசி  மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே 24 – ம் ஆண்டு கார்கில் போர்  நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில்  தலைவர் கேப்டன் ராம்குமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர் முருகன், கொளரவ தலைவர் சுவேதார் மேஜர் ...

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தீவு நகரமான இராமேஸ்வரத்தில் ...

கடந்த ஒரு மாதமாக மாயமான சீன வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் ...

சந்திரயான் 3 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் இறுதி கட்ட பணி நிறைவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு, கடந்த 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட ...

வால்பாறை : வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4ம் நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சோலையார் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக அடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும், சூறாவளியாலும் மரங்கள் சாய்ந்தும், மின்தடை ஏற்பட்டும் உள்ளது. இந்நிலையில் நேற்று ...

இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று முதல் நாளை வரை சென்னையில் நடைபெறுகிறது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு சிறப்புப் பணிக் ...

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. 1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் ...