மாயமான பழைய அமைச்சர்… புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனம்… சீன அரசின் மர்மம்.!!

கடந்த ஒரு மாதமாக மாயமான சீன வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் பின் அவரின் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் கின் கேங், திடீரென மாயமாகியுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. முதலில் அவர் உடல்நலக்குறைவால் அமைச்சர் பதவியில் கவனம் செலுத்த முடிவதில்லை என கூறப்பட்டது. பினன்ர், அவருக்கு பத்திரிகையாளர் ஃபூ சிஸாடியானுடன் காதல் இருந்ததாக செய்திகள் வெளியானது.

சீனாவில் முக்கிய பதவிகளில் இருப்பபவர்கள் திருமணம் தாண்டிய உறவுகளில் இருக்க தடை உள்ளது. இதனால் அவர் மாயமாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், கின் கேங் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய வெளியுறவு துறை அமைச்சராக வாங் யி நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்யூனிச ஆட்சி நடந்து வரும் சீனாவில் இரண்டு முறைக்கு மேல் யாரும் அதிபராக இருக்க முடியாது என்ற சட்டம் உள்ளது. ஆனால் ஒருவர் உயிரிழக்கும் வரை அதிபராக இருக்கலாம் என சட்டம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.