கோவை மத்திய சிறையில் உள்ள வால்மேடு பிளாக்கில் நேற்று கைதிகள் -வார்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.. இதில் கைதிகள் மரத்தில் ஏறி கைகளை பிளேடால் அறுத்து கொண்டனர்,.இதில் 7 கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. கைதிகள் வார்டர்களை தாக்கியதில் வார்டர்கள் ராகுல், பாபு ஜான்,மோகன்ராம் விமல் ராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மன அழுத்தம் மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் மன அழுத்தத்தை போக்கவும் ...

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 82,000 சிறுவிவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் ,அனைத்து ...

18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யும் போது, தனிப்பட்ட அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் கேட்கப்பட்டதாகவும், அதற்காக ஆதார் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் ...

கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 40) இவர் நேற்று கோவை இருகூர் எல் அன்டு டி பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ...

புதுடில்லி: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நேச ...

தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடையம் ஒன்றிய குழு சார்பில் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் ஆயிஷாபேகம், தமிழ்நாடு ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக  பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் ...

இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்களிலும் சாலைகளிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது ...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;- அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள ...