வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்..!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம்
அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;-

அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அன்றாட பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதார துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடித்தண்ணீரில் குளோரின் கலந்த குடித்தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் வருகின்ற வடகிழக்கு பருவமழையினை உரிய முன்னேற்பாடுகளுடன் எதிர்கொண்டு இயற்கை இன்னல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும்.

மேலும் பருவமழையினால் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04633-290548,1077 மற்றும் dmcollrtks@gmail.comcollrcampoffice@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சேக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..