வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது கட்டாயமில்லை.!!

18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யும் போது, தனிப்பட்ட அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் கேட்கப்பட்டதாகவும், அதற்காக ஆதார் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.