உதகையில் சிறு தேயிலை விவசாயிகளை பாதுகாப்போம் என்ற புதிய அமைப்பு துவக்கம்..!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 82,000 சிறுவிவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் ,அனைத்து போராட்ட அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடி அரசுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில். சிறு தேயிலை விவசாயிகளை பாதுகாப்போம் என்ற புதிய அமைப்பு வழக்கறிஞர் J B சுப்ரமணியன் தலைமையில் தொடங்கபட்டது. நடைபெற்ற தொடக்க நிகழ்வில் பல்வேறு ஊர் தலைவர்கள் மற்றும் நீலகிரியின் முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் தேயிலை விவசாயிகளின் சங்கங்களை சேர்ந்தவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர் . பச்சை.தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 35 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் ‘இதனை வலியுருத்தி சிறு விவசாயிகளை பாதுகாப்போம் அமைப்பின் மூலம் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவெடுக்கபட்டது., இந்நிகழ்வில் திரளான தேயிலை விவசாயிகள்
முக்கிய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்..