கொழும்பு: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வர மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...
முழு நேர குழந்தை தொழிலாளர்களாக மாறிய பனை தொழிலாளர்களின் பிள்ளைகள்- ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!
பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், புலம்பெயர்ந்த பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்படுவது குறித்து மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் ...
காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை… வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் 4 மடங்கு அதிகரிப்பு..!
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது மேலும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எல்லை ...
கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி ...
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2-வது அலை, 3வது அலை என உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. பின்னர் உலகம் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த ...
நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 ...
ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை ...
தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிராமத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் கிராமத்துக்கு இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ். ...
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து 6 வது நாளாக போர் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் 18000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் ...













