நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கி வைத்தார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் கடந்த 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் “செரியபானி” பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை – இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.
இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்” என்று கூறினார். இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.
நாகையில் இருந்து சுமாா் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6.500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து ஒரு நபருக்கு ரூ. 7.670 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நாகையி