தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ...
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு இடையே நடந்துவரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடிக்கிறது. இச்சூழலில் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணி அமர்த்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...
கனடா, தற்போது சீனாவுடன் ஒரு மோதலில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவும் கனடாவும் சர்வதேசக் கடல் எல்லைகளை மீறுவதாகவும், தேவையற்ற ராணுவ மோதலை தூண்டுவதாகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம், மிகவும் சிக்கலான தென் சீனக் கடல் தொடர்பானது. இந்தப் பெரிய கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. ...
சென்னை :கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. ...
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ், கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற ...
கோவை சித்தாபுதூர் ரவீந்திரநாத் தாகூர் லேஅவுட் டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57) இவர் நேற்று சங்கனூர், கண்ணப்ப நகர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் மாருதி ஆம்புலன்ஸ் வேன் இவர் மீது மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...
தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் ...
நடைமுறையில் Telegram செயலியை பயன்படுத்தி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. முதலில் Whats App-ல் Partime Job என்று பதிவுகளை அனுப்பி பின்னர் Telegram குரூப்பில் இணைய கூறுகிறார்கள். பின்னர் Google Map, Youtube, Hotel Restaurants போன்றவற்றிற்கு ஆன்லைன் மூலமாக Ratings Reviews கொடுத்தால் ஒரு ரேட்டிங்ஸ்க்கு 150 ரூபாய் என்று கொடுக்கப்படுகிறது. பின்னர் ...
வத்தலகுண்டு அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்த, பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, குன்னுத்துபட்டியை சேர்ந்த, பூ விவசாயி வேலுச்சாமி (55) இவர், வெள்ளிக்கிழமை இரு சக்கர ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் அருகே நீலாம்பதி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ...













