கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இதன்தொடக்க விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.சுகுணா புரத்தில் இருந்து பிள்ளையார் புரம் , பி. கே புதூர் வரையிலும் 25 கேமராக்கள் ...

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் முதியோர்கள் உணவுக்காக கஷ்டப்படுவதை அறிந்து வீடு தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து ஏழை மக்கள் உணவுக்காக டிரஸ்ட் அலுவலகத்தை நோக்கி வர ஆரம்பிக்கவே, தொடர்ந்து ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டாப் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது வால்பாறை முருகன் கோவில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் செல்வக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது இதையறிந்த ஓட்டுனர் சாலையில் இருந்த பொதுமக்களிடம் பிரேக்பிடிக்கவில்லை பிரேக் இல்லை ஒதுங்க ஒதுங்க என்று சத்தம் போட்டுக்கொண்டே ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில்ஒன்று கூடி பொங்கலிட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயில் வந்த புகை அங்கு மர கிளையில் இருந்த தேனீக்கள் கட்டிய கூட்டில் ...

இந்திய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான போட்டியில் திருவேற்காடு நகராட்சி மாநில அளவில் 8- வது இடத்தையும் தென்னிந்திய அளவில் 25- வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது 2023ஆம் ஆண்டுக்கான ஸ்வட்ச் சர்வேக் சான் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான போட்டி சமீபத்தில் நடத்தியது இதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது ...

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் மாவட்ட ஆட்சியர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ஜி.காா்னா் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பக்கவாட்டுச் சுவரில் மழைநீா் அதிகம் தேங்கியிருந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தை தாங்கி நிற்கும் தூணுடன் பக்கவாட்டுச் சுவா் சிமென்ட் கற்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. இதனால், பாலம் சற்று இறங்கியுள்ளது. ...

திருச்சி மாவட்டத்தில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் (11.01.24 முதல் 17.01.24 வரை) கடைபிடிக்கப்படுவருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் துண்டறிக்கை வழங்குதல் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி உறுதிமொழி எடுக்கும் ...

நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக பர்லியார் மலை பகுதியில் கன மழை பெய்ததால் தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி மலை ரயில் சேவை பாதிக்கபட்டது.மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு ...

சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த ...