ஏழை, எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தற்பொழுது 610 நாளை கடந்தது…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் முதியோர்கள் உணவுக்காக கஷ்டப்படுவதை அறிந்து வீடு தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து ஏழை மக்கள் உணவுக்காக டிரஸ்ட் அலுவலகத்தை நோக்கி வர ஆரம்பிக்கவே, தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர். தற்பொழுது 610 நாளை கடந்து ஏழை, எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன், துணைத் தலைவர் ரகுபதி, செயலாளர் சித்ராரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் தொடர்ந்து இடைவிடாமல் திறம்பட டிரஸ்ட்டை நடத்தி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன. காலையில் சிலம்பபள்ளி, மதியம் உணவு வழங்கும் திட்டம், இரவு மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி என அனைவரும் பாராட்டும் வகையில் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் சில நல்ல உள்ளங்கள் தயவு செய்து சிரமத்துடன் நடத்தி வருகின்றனர். எனவே நல்ல உள்ளங்கள் இந்த டிரஸ்ட் க்கு தொடர்ந்து உதவிகள் செய்தால் இந்த டிரஸ்ட் மூலம் ஏழை எளியவர்கள் தொடர்ந்து பயன்பெறுவார்கள். எனவே நல்ல உள்ளங்கள் இந்த டிரஸ்ட்க்கு உதவி செய்து இந்த டிரஸ்ட் தொடர்ந்து செயல்பட உதவிகள் செய்யுமாறு அதன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.