சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்குவதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பலனளிக்கும் வகையிலான பட்ஜெட் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ...
தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார், ...
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 65) சமூக சேவகர் .இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க பொதுமக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் பட்டா சம்பந்தமாக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி ...
சென்னை: அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்த 5 முஸ்லிம் கைதிகள் உட்பட 12 பேரை முன்விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட பலரை அண்ணா பிறந்த தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு நிகழ்வாக முன்விடுதலை செய்வது குறித்த பல ...
சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை ...
இந்தியாவின் சக்தி இசைக் குழுவினருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல இசைக்கலைஞர்களுக்கு உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது அமெரிக்காவின் கிராமி விருது. கடந்த 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் ...
உலக வரைப்படத்தின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்கிறதென்றால், எட்டு திசைகளிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், போருக்கு தயார் நிலையில் இருப்பதாக அதிபர் கிங் ஜான் அறிவித்துள்ளது உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளன. ஏற்கெனவே இஸ்ரேல் துவங்கி உக்ரைன், காசா வரையில் போர் பதற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு ...
சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை ...
கோவை சரவணம்பட்டி, கரட்டு மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1714 ) முன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அங்குள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த பென்னி மேத்யூ (வயது 54) என்பது ...
கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 28) கோவை ராஜ வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 வயது பெண் குழந்தை இமான்சு.சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தினேஷ் குமாரின் உறவினரின் கடிகாரம் சரிபார்க்கும் கடைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வாட்ச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஒயிட் பெட்ரோலை தண்ணீர் ...












