சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் ...

முருகனின் அறுபடைவீடுகளில் 3 வது படைவீடாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை இரண்டுமே உள்ளது. இத்துடன் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி ...

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29- ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் துக்ஹஜ் மாத முதல் பிறை தென்பட தொடங்கியுள்ளது. அன்றைய ...

பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கடும் வெப்ப அலையையும் மீறி குவிந்துள்ள பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகன்நாதர் , தேவி சுபத்ரா, பாலபத்ரா இன்று வலம் வருகின்றனர். பூரி ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம். இங்குள்ள ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டு ...

சைவ மடங்களுள் ஒன்றாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் அருளாட்சியில் 27 திருக்கோயில்கள் உள்ளன. அதில் தருமையாதீனத்தைச் சுற்றி நான்கு திசைக்கும் அருள் புரிகின்ற பெரும் தெய்வங்களாக மேற்கே சரபமூர்த்தியும், வடக்கே சட்டைநாதரும், கிழக்கே கால சம்ஹார மூர்த்தியும், தெற்கே வீரபத்திரரும் அரணாகத் திகழ்கின்றார்கள் என்பது வரலாறு. அதில், திருஞானசம்பந்தர் அவதாரத் தலமான சீர்காழியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ...

திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே இதைப் பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு ...

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கள்ளழகர் நேற்று காலையில் அழகர்மலையிலுள்ள கோயிலை சென்றடைந்தார். கோயிலுக்குள் நுழைந்த கள்ளழகருக்கு 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டிக் கழித்தனர். அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி ...

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ...