சிதம்பரம் நடராஜா் கோவில் கொடி மர விவகாரம்… தீட்சிதர்களுக்கும் , அறநிலைதுறை இடையே தொடரும் வாக்குவாதம்.!!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றும் பணியை.நட்ராஜ் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனா் . தற்போது உள்ளதைப் போலவே கொடிமரத்தை மாற்ற வேண்டும் எனவும், புதிதாக மாற்றப்படும் கொடி மரத்தில் வளையம் பொருத்தக் கூடாது எனவும் தற்போது உள்ளதைப் போலவே கொடி மரத்தை மாற்ற வேண்டும் என எழுத்துப்பூர்வ கடிதமாக அளிக்கத வேண்டும் என தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனா். இனி இது தொடா்பான பிரச்சனையை டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் .என கூறப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது சபாநாயகர் திருக்கோயில் எனப்படும் நடராஜர் கோயில். இந்தக் கோயிலின் நிர்வாகம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு உள்ளே அருள்மிகு தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இந்த சன்னதி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகிறது. இதற்கென ட்ரஸ்டிகள் உள்ளனர்.

இந்நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், அந்த கோயிலின் கொடி மரத்தை மாற்ற கோயில் டிரஸ்டிகள் முடிவு செய்தனர். இதுகுறித்து நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோயிலில் கொடிமரம் மாற்றுவதற்கு நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் டிரஸ்டிக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் பதில் கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் கோயிலில் கொடிமரம் அமைப்பதற்கு ஏதுவாக நேற்று கொடி மரத்திற்கு பூஜைகள் நடந்தது. இதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், துணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் தொடர்பான வழக்குகள் இருப்பதால் கொடி மரத்தை மாற்றக்கூடாது என கூறினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதன்பிறகு கொடிமரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையிலேயே புதிய கொடிமரத்தை மாற்ற வேண்டும். புதிதாக அமைய உள்ள கொடி மரத்தில் வளையம் அமைப்பது போன்ற எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. தற்போது உள்ளதைப் போலவே இருக்கும் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிக்க வேண்டும் எனவும் கூறினர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும், கோவிந்தராஜ பெருமாள் கோயில் டிரஸ்டிகளும் கலந்து பேசினர். அதன்படி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர் தீட்சிதர்களிடம் கடிதம் அளித்தனர். ஆனால் அந்த கடிதத்தில் சில வார்த்தைகளை மாற்றம் செய்ய வேண்டும் என தீட்சிதர்கள் கூறினார்கள் . இதில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து இந்த பிரச்சனையை சம்பந்தமாக டிஎஸ்பி அலுவலகத்தில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும். என கூறப்பட்டதால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.