மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் 2 நாட்கள் கார்கள் செல்ல தடை.!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் குவிக்கின்றனர் .இந்த நிலையில் நாளை ( சனிக்கிழமை) கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கோவிலுக்கு கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு மருதமலை கோவில் அடிவாரத்தில் இருந்து கோவில் வரை உள்ள மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பக்தர்களின் கார்கள் மற்றும் 4சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. எனவே பக்தர்கள் மலைப்பாதை டிக்கெட்டுகள் அல்லது கோவில் பஸ் மூலம் பயணம் செய்து சுவாமியே தரிசனம் செய்யலாம் என்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்..