மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகல தொடக்கம்..!

கோவை நவம்பர் 2 முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம் .அந்த வகையில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது .இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று ( சனிக்கிழமை) தொடங்கியது . காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, 10 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தினமும் காலையில் மாலையிலும் யாக சாலை பூஜை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 7 – ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் மூலவருக்கு சண்முகா ச்சனை,சத்ரு சமஹார வேள்வி நடக்கிறது. மாலை 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து 3 – 30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சாந்த அபிஷேகம் நடக்கிறது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதையடுத்து 8-ந் தேதி சுவாமிக்கு வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுவிரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் .துணை ஆணையர் செந்தில்குமார். அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.