சென்னை: சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றுள்ளார். நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தப்பின்னர் பேரணியாக மக்களை சந்தித்து துண்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். ...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டாடா என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி கடந்த 2019 ஆம் ஆண்டு அகடோபர் மாதம் பிசிசிஐ யின் தலைவராக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் கங்குலி பிசிசிஐ தலைவரானதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள், நாட்கள் செல்ல செல்ல, கங்குலியின் செயல்களால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதாவது கங்குலியின் தலையீட்டால் ...
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை அனைத்தும் இன்றைய தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கும், மீதமுள்ள ரூ.61ஆயிரத்து 912 கோடி மத்திய செஸ் வரி வசூலித்ததில் இருந்து நிலுவைத் தொகை ...
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. மொத்தம் 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ...
சென்னை : ”தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி ...
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் Xi Jinping மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பு சென்னை அருகேயுள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார். 2022 பிப்ரவரியில் புது தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்து தூதுக்குழுவினரால் பரிசாக ...
பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17.18 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான ...
நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி கடந்த 24-ம் தேதி டெல்டா ...
ஆன்லைன் ரம்மியை தடுப்பதற்கு விரைவில் புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் ஆன்லைன் ரம்மியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வலுவாக ...
யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இதற்கென பிரத்யேக இடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிடும் வகையில் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனை நேற்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் ...