தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை.
பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஏனோ அப்போது அது கைகூடவில்லை. இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறதாம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழத்தில் பாஜகவுக்கென மூன்று சேட்டிலைட் சேனல்களைத் தொடங்க டெல்லி தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம்.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரு சேனலும், பக்திமணம் கமழும் ஒழு சேனலும், 24 மணி நேரமும் செய்திகளை வாசிக்கும் ஒரு சேனலும் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் பாஜக தரப்பில் தொடங்கப்பட்டுள்ளன. ரங்கராஜ் பாண்டே மாதிரியான செய்தி ஆசிரியர்களை பொறுப்பில் நியமிக்கவும் ஆலோசனைகள் நடக்கிறதாம். விரைவில் இதுகுறித்த விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
Leave a Reply