நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. யங் இந்தியா பிரைவேட் லிட் நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா ...

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்குப் பிரதமர் வரவுள்ள நிலையில், இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சங்கர் ஜிவால் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த ...

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். விதிகளை மீறியதாக 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகரின் பேச்சைகேட்காமல், தொடர்ந்து பதாகைகளுடன் பேராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி, ...

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகமாகி விட்டது என்று கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன் கூறினார். கோவை மாவட்ட நிர்வாகம், ...

குடியரசு தலைவராக பதவியேற்ற பின், முதல்முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ...

பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளி கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாக இன்று தொடங்கியது. திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளை செயல்படுத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்கக் கூடியது. டெல்லியில் காவிரி ஆணையத்தின் 16-வது ...

சென்னை: பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்றார். கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார். ...

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, எடப்பாடி கே பழனிசாமி ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஓபிஎஸ் விடுத்த அறிவிப்பில், அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் ...

டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...