தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை- முதல்வர் எச்சரிக்கை..!

“தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும்” என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 22-ம் தேதி, 2022 – 2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது, சில பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், ஆர்.என்.ஐ அனுமதி இல்லாத பத்திரிகைகளை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “ஆர்.என்.ஐ-யில் பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுச்சேரியில் தடை செய்யப்படும். அத்துடன், தவறான செய்தி வெளியிடும் பத்திரிகைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.