உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை- விஜயகாந்த்திற்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!

டிகர் விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றியை நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அரசியலில் இயங்கி வருகிறார்.

ஆகஸ்ட் 25, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள். இன்று அவர், தனது 70 வது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!’ எனத் தெரிவித்துள்ளார்.