தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து போதை விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ராஜீவ்காந்தி ...

நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை தங்க ...

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக். 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. ...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் முழ்கி ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி ஓய்வு பெற்ற ...

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் ...

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் இரண்டாக உடைந்திருக்கிறது. இருவரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுக்கொடுத்திருக்கிறார். இதையடுத்து இரு அணிகளும் தங்கள் ...

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. ...

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யவும், புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி ...

சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...