சேலம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்றபோது, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் காரில் ஓமலூர் பேருந்து நிலையத்தைக் கடந்த சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் இருந்த டிராஃபிக் சிக்னல் அடியோடு பிடுங்கிக்கொண்டு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 15) காலையில் ...
1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2022 தமிழ்நாட்டுக்கு மோசமான ஆண்டு. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றங்கள் நடந்தது அந்த ஆண்டுதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ம் ஆண்டு மட்டும் 192 முதியவர்கள் ...
டெல்லியில் வரும் 16ம் தேதி 15 நாட்கள் நடைபெரும் பழங்குடியினருக்கான ஆதி மகோத்சவ் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில் இந்த 15 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. நாடுமுழுவதும் உள்ள பழங்குடிஇன கலைஞர்கள் தங்களின் பயிர்கள், தானியங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ...
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா செல்ல இருப்பதாகவும் அப்பயணத்தின் போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதர நெருக்கடிகளால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ...
கோவை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் பதவி எனக்கு கிடைத்தது மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன். பிரதமரும், குடியரசு தலைவரும் தமிழின் மீதும், தமிழ் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டின் மீது ...
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனால் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதால் சர்வதேச நிறுவனங்கள் ...
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி இன்று நிறைவு பெற்றுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சி, ...
சிவராத்திரி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் மக்கள் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவஜோதி அர்ப்பணம் 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட ...
எனக்கு வந்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் திடீரென கூறிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என இலங்கை இராணுவம் அதை மறுத்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருந்தால் 15 ஆண்டுகாலம் ...
தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. அதற்கு ஏற்றார்போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி, கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது ...













