எனக்கு வந்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் திடீரென கூறிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என இலங்கை இராணுவம் அதை மறுத்துள்ளது.
பிரபாகரன் உயிருடன் இருந்தால் 15 ஆண்டுகாலம் அவர் கோழை போல் பதுங்கி இருக்க மாட்டார் என்று சீமானும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையை என்னுடன் தொடர்பில் உள்ள போராளிகள் உறுதி செய்யவில்லை என்றும் பிரபாகரன் தெரிவித்தார்
மேலும் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply